மேலும் செய்திகள்
தந்தையை தாக்கிய மகன் மீது வழக்கு
24-Sep-2024
விழுப்புரம்,விழுப்புரத்தில் பணம் பிரச்னையில் முதியவரைத் தாக்கிய வழக்கில் தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம், வழுதரெட்டியைச் சேர்ந்தவர் சக்தி, 38; இவரது தம்பி பாலகணபதி. இருவரும் துணி வியாபாரம் செய்வதற்காக, அதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், 40; இவரது தந்தை குப்புசாமி, 60; ஆகியோரிடம் பணம் கடன் வாங்குவது வழக்கம்.இந்நிலையில், பணம் கொடுக்கல், வாங்கலில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சிவக்குமார், குப்புசாமி ஆகியோர், கடந்த மாதம் 30ம் தேதி வீட்டில் தனியாக இருந்த சக்தியின் தந்தை பெருமாளை, 80; எங்கே உனது மகன்கள் எனக்கேட்டு, தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து சிவக்குமார், குப்புசாமியை கைது செய்தனர்.
24-Sep-2024