மேலும் செய்திகள்
மின்சார வாரிய தொழிலாளர் சங்க கண்டன ஆர்ப்பாட்டம்
5 minutes ago
28ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்
6 minutes ago
வி ழுப்புரம் கோலியனுார், சகாதேவன்பேட்டை பகுதியில் கடந்த 21 மற்றும் 22ம் தேதி சிறுத்தை நடமாடிய தகவலை வனத்துறை உறுதி செய்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், விக்கிவராண்டி அருகே புலி நடமாடியதாக நேற்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. அதில், விக்கிரவாண்டி பகுதியில் நேற்று காலை 3.30 மணியளவில் ரயில் பாதையில் புலி ஒன்று நடந்து சென்றது. இதனை, ரயில் லோகோ பைலட் பார்த்து, ஸ்டேஷன் மாஸ்டரிடம் புகார் கூறியுள்ளார். வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். விக்கிரவாண்டி மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதியில் வசிக்கும் மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்லும்போது கவனமாக செல்லும்படி வனத்துறை அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர் என தகவல் பரவியது. இது விக்கிரவாண்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து ரயில்வே போலீஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, இது தவறான தகவல். இதுபோன்று ரயில் லோகோ பைலட் யாரும் தகவல் தெரிவிக்கவில்லை. இவை முற்றிலும் வதந்தி என தெரிவித்தனர்.
5 minutes ago
6 minutes ago