உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வர்த்தக சங்க பேரமைப்பு கொடியேற்று விழா

வர்த்தக சங்க பேரமைப்பு கொடியேற்று விழா

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் வணிகர் சங்க பேரமைப்பு கொடியேற்று விழா நடந்தது.விக்கிரவாண்டியில் நடந்த வர்த்தகர் சங்க நிகழ்ச்சிக்கு தலைவர் ராஜபாண்டியன் தலைமை தாங்கினார். அமைப்பாளர் தனசேகரன் ,கவுரவ தலைவர் சம்பத், மாவட்டத் தலைவர் சர்க்கார் பாபு, தொகுதி செயலாளர் ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ஜியாவுதீன் வரவேற்றார்.மாநிலத் தலைவர் விக்கிரம ராஜா சங்க கொடி ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். இதில் மாவட்டத் தலைவர் ராமகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் அக்பர் அலி, மாநில துணைத் தலைவர்கள் பிரகாஷ்,பிரேம், யாசின், பொருளாளர் சாதிக் பாஷா, நிர்வாகிகள் ரவி, சிவா, சிவக்குமார், காதர் பாட்ஷா, பாலமுருகன், கார்த்திக், பாரதி, முருகன், தினேஷ்,சந்தோஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ