உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தீயணைப்பு தியாகிகள் தினம்

தீயணைப்பு தியாகிகள் தினம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை சார்பில் தீயணைப்பு தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது. நாடு முழுதும் ஏப்.14ம் தேதி தீயணைப்பு தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. அன்று தீ விபத்து மற்றும் மீட்பு பணிகளில் வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு, தீ தொண்டு நாளாக பின்பற்றப்படுகிறது. அதன்படி, விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் நேற்று தீயணைப்பு தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட தீயணைப்பு துறை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட அலுவலர் பாஸ்கரன் தலைமை தாங்கி, மறைந்த வீரர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். உதவி மாவட்ட அலுவலர்கள் ஜெயசங்கர், ஜமுனாராணி மற்றும் அனைத்து தீயணைப்பு நிலைய அலுவலர்கள், முன்னணி வீரர்கள் கலந்துகொண்டு, தீ விபத்து மீட்பு பணியின்போது வீரமரணம் அடைந்த 33 தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை