உணவு பாதுகாப்பு அதிகாரி ஓட்டல்களில் திடீர் ஆய்வு
விக்கிரவாண்டி : விழுப்புரம் மாவட்டத்தில் நெடுஞ்சாலையோர ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு அபராதம் விதித்தனர். விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுகந்தன் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரி கொளஞ்சி ஆகியோர் விழுப்புரம் முதல் ஒலக்கூர் வரை நெடுஞ்சாலையோரம் உள்ள 8 ஓட்டல்களில் திடீர் ஆய்வு செய்தனர்.ஆய்வின் போது ஓட்டல்களில் வைத்திருந்த கெட்டுப்போன இட்லி மாவு மற்றும் சாதங்களை கொட்டி அழித்தனர். இதில் விதிமீறிய 3 ஓட்டல்களுக்கு தலா 5 ஆயிரம் அபராதம் விதித்தும், 5 ஓட்டல்களுக்கு நோட்டீஸ் வழங்கினர்.