அனுமதியின்றி வசித்த வெளிநாட்டு பெண் கைது
விழுப்புரம்: மேல்மலையனுார் அருகே அரசு அனுமதியின்றி வசித்த வெளிநாட்டு பெண்ணை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அடுத்த சங்கிலிக்குப்பம் கிராமத்தில் வெளிநாட்டை சேர்ந்த பெண் ஒருவர் அனுமதியின்றி வசிப்பதாக மேல்மலையனுார் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று அங்குள்ள சையத்காதர் மனைவி ஷெலினாபீ, 38; என்பவரை விசாரணை செய்தனர். விசாரணையில், அவரின் சொந்த ஊர் பங்களாதேஷ் என்பதும், அவர் அனுமதியின்றி கடந்த 3 ஆண்டுகளாக கள்ளத்தனமாக அங்கு வசிப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்குப் பதிந்து ஷெலினாபீயை கைது செய்தனர்.