உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  மாஜி முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அழைப்பு

 மாஜி முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அழைப்பு

விழுப்புரம்: முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க வேண்டும் என மாவட்ட பொறுப்பாளர் அழைப்பு விடுத்துள்ளார். விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் கவுதமசிகாமணி அறிக்கை : தமிழக துணை முதல்வர் உதயநிதி வரும் 6ம் தேதி மாலை 4 மணிக்கு, விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் சிந்தாமணி கிராமத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவசிலையை திறந்து வைக்கவுள்ளார். மாநில துணை பொது செயலாளர் பொன்முடி தலைமை தாங்குகிறார். தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி வரவேற்கின்றார். அமைச்சர் பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா, மாவட்ட அவை தலைவர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகிக்கின்றனர். இதில், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இதை தொடர்ந்து, துணை முதல்வர் உதயநிதி, மாலை 5 மணிக்கு விக்கிரவாண்டி சூர்யா பொறியியல் கல்லுாரி வளாகத்தில் நடைபெறும், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி அனைத்து அணி மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகின்றார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி