உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வனத்துறை அதிகாரிகளை தாக்கிய 4 பேருக்கு வலை

வனத்துறை அதிகாரிகளை தாக்கிய 4 பேருக்கு வலை

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே வனத்துறை அதிகாரிகளை தாக்கிய4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அருங்குறுக்கை, நத்தாமூர் காப்பு காட்டில் மாட்டு வண்டியில் மணல் கடத்துவதாக கடந்த 8ம் தேதி இரவு 9:30 மணியளவில் உளுந்துார்பேட்டை வனச்சரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.வனவர்கள் பன்னீர்செல்வம், பிரபாகரன் அங்கு சென்றனர். அவர்களை பார்த்து, மணல் கடத்தியவர்கள் தப்பியோடினர். அவர்களில் தர்மா என்பவரை பிடித்து வேனில் ஏற்றினர்.தப்பியோடிய நபர்கள் மீண்டும் வந்து வனத்துறையினர் இருவரை தாக்கி, பிடிக்கப்பட்ட தர்மாவுடன் தப்பிச் சென்றனர். புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் அருங்குறுக்கை கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், ஆனந்த், அஜித்குமார், தர்மா ஆகிய நான்கு பேர் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ