உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இலவச சைக்கிள் வழங்கும் விழா

இலவச சைக்கிள் வழங்கும் விழா

மயிலம் : மயிலம் அடுத்த வீடூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.ஆலகிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடந்த விழாவிற்கு, வீடூர் ஊராட்சி தலைவர் ஜெகதீஸ்வரி பிரகாஷ் தலைமை தாங்கினார். மயிலம் ஒன்றிய சேர்மன் யோகேஸ்வரி, முன்னாள் எம்.எல்.ஏ., சேதுநாதன் ஆகியோர் 137 மாணவ, மாணவியர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினர்.மயிலம் ஒன்றிய கவுன்சிலர் சுந்தரி தமிழரசன், துணைத் தலைவர் அஞ்சலாட்சி மோகன்தாஸ் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் பச்சைகண்ணு வரவேற்றார். சிறப்பு விருந்தினர் வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன் விவசாய அணி பாஸ்கர் வாழ்த்திப் பேசினர்.கட்சி நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். தமிழாசிரியர் தெய்வமணி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்