உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி மையம் துவக்கம்

போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி மையம் துவக்கம்

செஞ்சி:செஞ்சியில் போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கான இலவச பயிற்சி மையத்தை சப் கலெக்டர் துவக்கி வைத்தார். செஞ்சி ராஜேந்திரா நகரில் அப்துல் கலாம் வல்லரசு இயக்கம் சார்பில் போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, அப்துல் கலாம் ஐ.ஏ.எஸ்., அகடமி இலவச பயிற்சி மையம், கணினி வசதியுடன் கூடிய நுாலகம் திறப்பு விழா நடந்தது. தாசில்தார் செல்வகுமார் தலைமை தாங்கினார். முதுநிலை வருவாய் ஆய்வாளர் கண்ணன் வரவேற்றார். திண்டிவனம் சப் கலெக்டர் திவ்யான்ஷூ நிகம், பயிற்சி மையத்தை துவக்கி வைத்து, மாணவர்களிடம் விண்ணப்பங்களை வழங்கினார். சென்னை ஐ.ஐ.டி., திட்ட தலைவர் அரிகிருஷ்ணன், ஸ்ரீ ரங்கபூபதி கல்வி நிறுவன தாளாளர் ரங்கபூபதி, தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் சிவா, திவ்யா கல்விக் குழும தாளாளர் செல்வராஜ், கலைவாணி கல்விக் குழும செயலாளர் பிரித்விராஜ், சேம்பர் ஆப் காமர்ஸ் செயலாளர் பாலாஜி சுரேஷ், நதிநீர் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் அறவாழி, தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகி சக்திவேல் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். செஞ்சி திருமண மண்டப உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை