உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இலவச மனைப்பட்டா எம்.எல்.ஏ., வழங்கல்

இலவச மனைப்பட்டா எம்.எல்.ஏ., வழங்கல்

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில், பயனாளிகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்கும் விழா நடந்தது.விக்கிரவாண்டியில் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு வருவாய்த் துறை சார்பில் நடந்த விழாவிற்கு, தாசில்தார் யுவராஜ் தலைமை தாங்கினார்.பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை, துணைச் சேர்மன் பாலாஜி முன்னிலை வகித்தனர். சமூக நல தனி தாசில்தார் செந்தில்குமார் வரவேற்றார்.விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., புகழேந்தி தாலுகாவைச் சேர்ந்த 65 பயனாளிகளுக்கு இலவச மனைப்பட்டாவை வழங்கி பேசினார்.ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி, ஜெயபால், நகர செயலாளர் நைனா முகமது, மாவட்ட தலைவர்கள் பாபு ஜீவானந்தம், அரிகரன், கண்காணிப்பு குழு எத்திராசன், துணை அமைப்பாளர் கலைச்செல்வன், நகர தலைவர் தண்டபாணி, மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை