உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாராகி அம்மன் சிலை கும்பாபிஷேக விழா

வாராகி அம்மன் சிலை கும்பாபிஷேக விழா

விழுப்புரம் : விழுப்புரம், கமலா நகரில் உள்ள செல்லியம்மன் கோவிலில் புதிதாக 12 அடி உயர மஹா வாராகி அம்மன் சிலையும், ராகு, கேது சிலைகளும் நிறுவப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது.விழாவையொட்டி கடந்த 19ம் தேதி கணபதி பூஜையும் முதல் கால யாகசாலை பூஜையும் நடந்தது. 20ம் தேதி காலை இரண்டாம் கால யாகசாலை பூஜையும், ஹோமங்களும் நடந்தது. இரவு 10:00 மணிக்கு புதிதாக 12 அடி உயர மஹா வாராகி அம்மன் சிலையும், அருகே ராகு, கேது சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.அதனைத் தொடர்ந்து நேற்று காலை 7:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை நடந்தது. 10:00 மணிக்கு கடம் புறப்பாடாகி வாராகி அம்மன் கோவில் கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை