உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

அரசு பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் : விழுப்புரத்தில் அரசு பணியாளர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன், நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலர் ராமலிங்கம், மாநில துணை தலைவர் வீரப்பன் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் சம்பத் வரவேற்றார். சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் சிறப்புரையாற்றினர். மாநில இணை பொதுச்செயலர் சிவக்குமார், மாநில செயலர் இளங்கோவன், மாநில துணை தலைவர் சங்கர், மாவட்ட தலைவர் அன்பழகன் உட்பட பலர் பங்கேற்றனர். அரசு பணியாளர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறை படுத்த வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, டாஸ்மாக் பணியாளர்கள், துப்புரவு ஊழியர்கள், ரேஷன் கடை பணியாளர்களுக்கு நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். மாவட்ட மகளிரணி சுந்தரவள்ளி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !