உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றிட கிராம சபை கூட்டம்: கலெக்டர் தகவல்

வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றிட கிராம சபை கூட்டம்: கலெக்டர் தகவல்

விழுப்புரம் : குடியரசு தின விழாவையொட்டி காங்கேயனூர் ஊராட்சியில் கலெக்டர் பழனி தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது.விழுப்புரம் அருகே காணை ஒன்றியம், காங்கேயனூர் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் பழனி தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., புகழேந்தி முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் நெடுஞ்செழியன் வரவேற்றார். ஊராட்சியில் நடைபெற்று வரும் திட்டங்கள், மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்டங்கள் குறித்து, பொதுமக்களுடன் கலந்துரையாடினர்.அப்போது கலெக்டர் பழனி பேசியதாவது: கிராம சபையின் நோக்கம், ஊராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை பொதுமக்கள் முன்னிலையில், ஒருமனதாக நிறைவேற்றுவதாகும். அந்த வகையில், ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில், கிராம சபை கூட்டம் நடத்த முதல்வர் உத்தரவிட்டிருந்தார். கடந்தாண்டு ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட வரவு - செலவு தணிக்கை அறிக்கை, நடப்பாண்டில் மேற்கொள்ள உள்ள ஊராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த தேவையான நிதியுதவியினை பெறுதல், புதிய திட்டங்களை தேர்வு செய்து, ஒருமனதாக நிறைவேற்றிட இந்த கிராம சபை கூட்டம் மிக பயனுள்ளதாக இருக்கும் என்றார்.ஊராட்சிக்கு தேவையான திட்டங்கள் குறித்து, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், காணை சேர்மன் கலைச்செல்வி, துணை சேர்மன் வீரராகவன், ஊராட்சி உதவி இயக்குநர் பொன்னம்பலம், கவுன்சிலர்கள் சிவக்குமார், முருகன், சேட்டு, விழுப்புரம் தாசில்தார் கிருஷ்ணதாஸ் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை