மேலும் செய்திகள்
கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
4 hour(s) ago
தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
4 hour(s) ago
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைகேட்பு முகாம் இன்று அனைத்து தாலுகா அலுவலகங்களில் நடக்கிறது.கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டத்தில், பொது விநியோக திட்டத்தின் சேவைகளை, அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு இன்று 10ம் தேதி ஒவ்வொரு தாலுகா அலுவலகத்திலும், வட்ட வழங்கல் அலுவலர்களால் குறைகேட்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம்களில், ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேஷன் கார்டு கோருபவர்கள் மனு அளிக்கலாம்.அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களையும், சேவை குறைபாடுகள் குறித்த புகார்களையும் மனுவாக கொடுக்கலாம்.இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, பொது விநியோகத்திட்டம் தொடர்பான தங்களது குறைகளுக்கு தீர்வு காணலாம்.
4 hour(s) ago
4 hour(s) ago