உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குறை கேட்பு நாள் கூட்டம்; 492 மனுக்கள் குவிந்தன

குறை கேட்பு நாள் கூட்டம்; 492 மனுக்கள் குவிந்தன

விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம், கலெக்டர் தலைமையில் நடந்தது.கலெக்டர் பழனி பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, விசாரணை மேற்கொண்டு, தொடர்புடைய துறை அலுவலர்கள், மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.குறைதீர் நாள் கூட்டத்தில் 492 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. அதில், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, கடனுதவி, ஆக்கிரமிப்பு அகற்றம், பிரதமரின் வீடு கட்டும் திட்டம், கனவு இல்லம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மக்கள் வழங்கினர். மேலும், முதல்வரின் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீதும் தீர்வுகாண அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி, சமூக பாதுகாப்புதிட்ட சப் கலெக்டர் முகுந்தன், சமூக நலஅலுவலர் ராஜம்மாள் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ