உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மளிகை கடையில் குட்கா விற்றவர் கைது

மளிகை கடையில் குட்கா விற்றவர் கைது

விழுப்புரம்: விழுப்புரத்தில் மளிகை கடையில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மேற்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மதியம் ரோந்து சென்றனர். அப்போது, காந்தி வீதியில் உள்ள, பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த முகமதுஅசாருதின், 28; என்பவரது மளிகை கடையில், தடை செய்யப்பட்ட குட்கா பொட்டலங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததை போலீசார் கண்டறிந்தனர். அவர் மீது வழக்கு பதிந்து, கைது செய்த போலீசார், அந்த கடையிலிருந்து 50 கிலோ குட்கா பாக்கெட் மூட்டைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை