உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சுகாதார பேரவை கூட்டம்

சுகாதார பேரவை கூட்டம்

விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் நடந்தது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். மாவட்டத்தில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், கட்டட வசதிகள் போன்ற தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில், முக்கிய சுகாதார குறியீடுகள், திட்டங்கள் குறித்து துறை அலுவலர்களுடன் கேட்டறியப்பட்டது. மருத்துவம் மற்றும் ஊரக நலவாழ்வு இணை இயக்குநர் லதா, மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில்குமார், தொழுநோய் துணை இயக்குநர் சுதாகர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ