உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மகப்பேறு மரணம் குறைக்கப்பட்டுள்ளது சுகாதாரத்துறை அமைச்சர் பெருமிதம்

மகப்பேறு மரணம் குறைக்கப்பட்டுள்ளது சுகாதாரத்துறை அமைச்சர் பெருமிதம்

விக்கிரவாண்டி : விழுப்புரம் மாவட்டத்தில் சுகாதார துறை சிறப்பாக செயல்பட்டதால் மகப்பேறு மரணம் வெகுவாக குறைத்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் பேசினார்.முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நடந்த விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு புதிய மருத்துவ கட்டடங்களை திறந்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது.விழுப்புரம் மாவட்டத்தில் 15-வது நிதி குழு மானிய திட்டத்தில் 5 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பில் 17 புதிய மருத்துவ கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. முண்டியம்பாக்கத்தில் மருத்துவமனையில் பச்சிளங் குழந்தைகளின் செவித்திறன் கண்டறிவதற்காக ஒலி உட்புகா அறையும், மூன்றாம் பாலினத்தவருக்கு ஆலோசனை பிரிவு, 12 படுக்கைகள் கொண்ட பச்சிளம் குழந்தைகள் பிரிவுகள் திறக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் 1100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து திண்டிவனத்தில் 67 கோடி ரூபாய் மதிப்பிலும் , முன்னாள் அமைச்சர் பொன்முடி கேட்டுக் கொண்டதின் பேரில், திருக்கோவிலுாரில், 57 கோடி ரூபாய் மதிப்பில் மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் மகப்பேறு மரணம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் மகப்பேறு மரணம் அடைபவர்கள் 103 பேரில், விழுப்புரம் மாவட்டத்தில் 26.4 சதவிகிதமும், பிறக்கும் குழந்தைகளின் இறப்பு விகிதம் இந்திய அளவில் ஆயிரம் குழந்தைகளில் 28 குழந்தைகள் இறக்கின்றனர். இதில் விழுப்புரம் மாவட்டத்தில் 8 .7 சதவீதம் குழந்தைகள் இறக்கின்றனர். இது மிகப் பெரிய சாதனையாகும்.விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் குழந்தை இறப்பு விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளது. இதற்கு முக்கிய காரணம் சுகாதாரத்துறை சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை