விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மேல் பெய்த கன மழை விட்டு, விட்டு நேற்று வரை பெய்தது. இதனால், விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, மயிலம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளமாக தேங்கியது. பலர் மழையில் நனைந்து கொண்டு அன்றாட பணிகளில் ஈடுபட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. மாவட்டத்தில் பெய்த மழையளவு விவரம் மில்லி மீட்டரில் : விழுப்புரத்தில் 30 மி.மீ., மழையும், கோலியனுார் 24 ., வளவனுார் 32, கெடார் 15, முண்டியம்பாக்கம் 8, நேமூர் 32, கஞ்சனுார் 7, சூரப்பட்டு 16, வானுார் 3, திண்டிவனம் 6, மரக்காணம் 6, செஞ்சி 22, செம்மேடு 41, வல்லம் 76, அனந்தபுரம் 20, அவலுார்பேட்டை 33, வளத்தி 27, மணம்பூண்டி 14, முகையூர் 25, அரசூர் 58, திருவெண்ணெய்நல்லுார் 65, உட்பட மாவட்டத்தில் மொத்தம் 560 மி.மீ., மழையளவு பதிவாகியுள்ளது. இதன் சராசரி 26.67 மி.மீ., ஆகும். கன மழையால் மயிலம், திண்டிவனம் பகுதிகளில் இரு குடிசை வீடுகள் இடிந்து விழுந்தன.