உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இந்து முன்னணி பொதுக்குழு கூட்டம்

இந்து முன்னணி பொதுக்குழு கூட்டம்

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அரசூரில் இந்து முன்னணி பொதுக்குழு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சதிஷ் தலைமை தாங்கினார். கோட்ட தலைவர் சிவா, செயலாளர் முருகையன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில செயலாளர் மணலி மனோகர், சுனில்குமார் சிறப்புரையாற்றினர்.கூட்டத்தில், பயங்கரவாத அமைப்புகளை ஆதரிப்பதை திராவிட கட்சிகள் கைவிட வேண்டும். போதைப் பொருட்கள் நடமாட்டத்தை அரசு இரும்பு கரம் கொண்டு ஒழிக்க வேண்டும். தேசத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல மோடிக்கு மக்கள் ஓட்டளிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பா.ஜ., மாநில துணைத் தலைவர் வேலு, ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை