உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஹோலி ஏஞ்சல் பள்ளி மாணவர்கள் சிலம்பத்தில் உலக சாதனை நிகழ்ச்சி

ஹோலி ஏஞ்சல் பள்ளி மாணவர்கள் சிலம்பத்தில் உலக சாதனை நிகழ்ச்சி

மயிலம் : மயிலம் அடுத்த ரெட்டணை ஹோலி ஏஞ்சல் பள்ளி மாணவர்கள் நாமக்கலில் நடந்த மாநில அளவிலான சிலம்பம் வீரர்களின் உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்று பரிசு பெற்றனர். நாமக்கல் மாவட்ட நேரு யுக கேந்திரா, சிலம்பம் ஆசான்கள், பயிற்சியாளர்கள் நலச்சங்கம் சார்பில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சிலம்பம் வீரர்களின் உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து 3,300 மாணவ, மாணவியர் பங்கேற்று ஒரு மணி நேரம் ஒரே மாதிரி சிலம்பம் சுற்றினர். இந்நிகழ்ச்சியில் ரெட்டணை ஹோலி ஏஞ்சல் பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர். அவர்ககளுக்க பள்ளி நிறுவனர் பழனியப்பன், முதுநிலை முதல்வர் அகிலா பழனியப்பன் மற்றும் சிபி.எஸ்.இ., பள்ளி முதல்வர் எரோமியாஸ் பிஸ்கோ, சிலம்ப ஆசிரியர் அபிமன்யு ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ