உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஓட்டலில் தகராறு; உரிமையாளர் கைது

ஓட்டலில் தகராறு; உரிமையாளர் கைது

விழுப்புரம் : விழுப்புரத்தில் ஓட்டலில் சாப்பிட்டவரிடம் தகராறு செய்து தாக்கிய சம்பவத்தில் ஓட்டல் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் ரயில் நிலையம் அருகே உள்ள ஓட்டலில், நேற்று மாலை சென்னை வேளச்சேரி லட்சுமிபுரத்தை சேர்ந்த சுப்ரமணி மகன் சத்தியராஜ், 33; தனது குடும்பத்துடன் பிரியாணி சாப்பிட்டுள்ளார். அப்போது, பிரியாணிக்கு கூடுதலாக வெங்காயம் கேட்டுள்ளார். அதற்கு ஊழியர்கள் பணம் கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அங்கு வந்த ஓட்டல் உரிமையாளரான விழுப்புரம் மருதூரை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் சூர்யா, 29; சத்தியராஜை தாக்கியுள்ளார். தடுத்த அவரது மனைவி சத்யாவை, 30; வையும் ஓட்டல் ஊழியர்கள் தாக்கி, மிரட்டியுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து, ஓட்டல் உரிமையாளர் சூர்யாவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை