உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மனைவியை தாக்கிய கணவர் கைது

மனைவியை தாக்கிய கணவர் கைது

வானுார் : குடிபோதையில் மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர். கிளியனுார் அடுத்த கொந்தமூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சீனுவாசன், 43; கூலித் தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி, 40; குடிப்பழக்கம் உள்ள சீனுவாசன், அடிக்கடி குடித்து விட்டு வந்து, மனைவியிடம் தகராறு செய்து வந்தார். கடந்த 28ம் தேதி போதையில், மனைவி சரஸ்வதியிடம் தகராறு செய்து, தாக்கினார்.இது குறித்து சரஸ்வதி அளித்த புகாரின் பேரில், சீனுவாசன் மீது கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை