| ADDED : ஜன 22, 2024 12:30 AM
மரக்காணம்,- மரக்காணம் அருகே 3.87 கோடி ரூபாய் மதிப்பில் தார்சாலை மற்றும் பாலம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.நெடுஞ்சாலைத்துறை, ஒருங்கிணைந்த சாலை உட்கோட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மரக்காணம் அடுத்த ஆலத்துாரில் இருந்து செங்கல்பட்டு மாவட்ட எல்லை வரை 3 கி.மீ., துாரம் தார் சாலை மற்றும் கோவடி கிராமத்தில் இருந்து தென்நெற்குணம் கிராமம் செல்லும் சாலையில் 1.6 கி.மீ., பெட்டி வடிவ பாலம் கட்டும் பணிக்கு 3.87 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான பணியை அமைச்சர் மஸ்தான் பூமி பூஜை நடத்தி துவக்கி வைத்தார்.மாவட்ட துணைச் செயலாளர் ரவிகுமார், சேர்மன் தயாளன், கோட்ட பொறியாளர் சிவசேனா, உதவி கோட்ட பொறியாளர் கவிதா, உதவி பொறியாளர் தீனதயாளன் உட்பட பலர் பங்கேற்றனர்.