உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  துாய்மைப் பணியாளர்களுக்கு காப்பீட்டு அட்டை வழங்கல்

 துாய்மைப் பணியாளர்களுக்கு காப்பீட்டு அட்டை வழங்கல்

செஞ்சி: துாய்மைப் பணியாளர் நல வாரியத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் துாய்மைப் பணியாளர்களுக்கு காப்பீட்டு திட்ட அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. செஞ்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். துாய்மைப் பணியாளர் நல வாரிய மாநில உறுப்பினர் கண்ணன், தாட்கோ மாவட்ட மேலாளர் ரமேஷ்குமார் முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ., நடராஜன் வரவேற்றார். செஞ்சி தொகுதி எம்.எல்.ஏ., மஸ்தான் 55 துாய்மைப் பணியாளர்களுக்கு காப்பீட்டு திட்ட அட்டை வழங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., செந்தமிழ்ச்செல்வன், பி.டி.ஓ., ராமதாஸ், தி.மு.க., நிர்வாகிகள் வாசு, அய்யாதுரை, பழனி, செந்தில் பங்கேற்றனர். ஏ.பி.டி.ஓ., சசிகலா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை