மேலும் செய்திகள்
மரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி சாவு
28-Nov-2025
கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பம் அருகே சுற்றுலா வந்த ஐ.டி., ஊழியர், மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், பெருங்களத்துார் ஸ்ரீ சக்கரா அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன், 36; ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தனது உறவினர்கள் 4 பேருடன், புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தார். அனைவரும், சின்ன கோட்டக்குப்பம் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினர். நேற்று அதிகாலை 3:30 மணிக்கு திடீரென பார்த்திபனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. உடன், புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். கோட்டக்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
28-Nov-2025