ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி மாணவி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
விழுப்புரம்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் விழுப்புரம் ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி மாணவி மனிஷா மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.விழுப்புரம் ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி மாணவி மனிஷா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 500க்கு 494 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்துள்ளார். இந்த மாணவி, தேசிய அளவிலான போட்டிகளில் கடந்த இரு ஆண்டுகளாக ரக்பி, சாப்ட் பால் போட்டிகளில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மாணவி மனிஷா, கடந்தாண்டு நடனத்தில் பங்கேற்று உலக சாதனையும் படைத்துள்ளார். பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவி மனிஷாவை, பள்ளி தாளாளர் பிரகாஷ், செயலாளர் ஜனார்த்தனன் மற்றும் முதல்வர்கள் பாராட்டினர்.ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி கடந்த 18 ஆண்டு களாக தொடர்ந்து பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2பொதுத் தேர்வுகளில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.