உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கமலக்கன்னியம்மன் கோவில் தேர் திருவிழா ஆலோசனைக் கூட்டம்

கமலக்கன்னியம்மன் கோவில் தேர் திருவிழா ஆலோசனைக் கூட்டம்

செஞ்சி : செஞ்சிக்கோட்டை கமலக்கன்னியம்மன் கோவிலில் தேர் திருவிழா நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது. செஞ்சி ராஜகிரி கோட்டை மீதுள்ள கமலக்கன்னியம்மனுக்கு பல நுாற்றாண்டுகளாக தேர் திருவிழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு தேர் திருவிழா நாளை 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. 13ம் தேதி தேர் திருவிழா நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், செஞ்சி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செல்வக்குமார் தலைமையில் நடந்தது. இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தார். அறங்காவலர் குழு தலைவர் அரங்க ஏழுமலை, தொழிலதிபர் ரமேஷ், ஆர்.ஐ.,க்கள் கார்த்திக், பிரபு சங்கர் மற்றும் விழாக்குழுவினர், இந்திய தொல்லியல் துறையினர், தீயணைப்பு, பேரூராட்சி, நெடுஞ்சாலைத்துறை, மின்வாரியம் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் பேரூராட்சி மூலம் குடிநீர் வசதி செய்வது, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாதவாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது, தேர் செல்லும் சாலையில் உள்ள வேகத்தடைகளை தற்காலிகமாக அகற்றுவது, குப்பைகளை உடனுக்குடன் அகற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி