மேலும் செய்திகள்
மாணவிகளுக்கு பாராட்டு விழா
08-Nov-2025
திண்டிவனம்: மாவட்ட அளவில் நடந்த கோ கோ போட்டியில் ரெட்டணை கென்னடி பள்ளி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். ரெட்டணை கென்னடி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கடந்த வாரம் விழுப்புரம் மாவட்ட அளவில் நடந்த விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றனர். இதில் 19 வயதுக்குட்பட்ட பிரிவு கோ கோ போட்டியில் பங்கேற்ற மாணவிகள் மூன்றாமிடத்தைப் பிடித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளியின் தாளாளர் சண்முகம், முதல்வர் சந்தோஷ், நிர்வாக இயக்குநர் கார்த்திகேயன் ஆகியோர் பாராட்டி, சான்றிதழ் வழங்கினர்.
08-Nov-2025