மேலும் செய்திகள்
எஸ்.கே.எல்., பள்ளியில் பட்டமளிப்பு விழா
22-Mar-2025
விழுப்புரம்; விழுப்புரம் திருக்காமு நகரில் உள்ள கிட்ஸி மழைலயர் பள்ளியின் பட்டமளிப்பு விழா மற்றும் 10ம் ஆண்டு விழா நடந்தது.பள்ளி தாளாளர் சிவகாம சுந்தரி தலைமை தாங்கினார். தேஜாஸ்ரீ வரவேற்றார். கிருஷ் ரெசிடென்சி குழும தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர் லட்சுமணன் எம்.எல்.ஏ., பள்ளி மாணவர்களுக்கு பட்டம் வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியை சரண்யா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.ஆசிரியைகள் சசிகலா, ஹேமா, வித்யா மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர். இளஞ்செழியன் நன்றி கூறினார்.
22-Mar-2025