உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சமையல் அறைக்கூடம் திறப்பு

சமையல் அறைக்கூடம் திறப்பு

வானுார்: ராவுத்தன்குப்பம் ஊராட்சியில் சத்துணவு மைய சமையல் கூடம் திறப்பு விழா நடந்தது.ராவுத்தன்குப்பம் ஊராட்சியில் 6.99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், பாப்பாஞ்சாவடி ஊராட்சியில் 5.32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் சத்துணவு மைய சமையல் கூடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சேர்மன் உஷா முரளி தலைமை தாங்கி, சமையல் கூடத்தைத் திறந்து வைத்தார். ஊராட்சி தலைவர் காமாட்சி வெங்கடேசன் வரவேற்றார். வானுார் பி.டி.ஓ., கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில் தி.மு.க., ஒன்றிய செயலாளர் முரளி, அவைத்தலைவர் சங்கர், துணைச் செயலாளர் ஜோதி பிரகாசம், முன்னாள் கவுன்சிலர் வெங்கடேசன், கிளைச் செயலாளர் செல்வராஜ், துணைத் தலைவர் அருள் உட்பட பலர் பங்கேற்றனர்.இதே போன்று, ஒட்டை ஊராட்சியில் 5.32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பள்ளி சத்துணவு மைய சமையல் கூடத்தை ஊராட்சி தலைவர் ஜெயக்கொடி பெருமாள் முன்னிலையில் சேர்மன் திறந்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி