உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கொல்லியங்குணம் கல்லுாரி மாணவிக்கு பாராட்டு

கொல்லியங்குணம் கல்லுாரி மாணவிக்கு பாராட்டு

மயிலம்: கொல்லிங்குணம் பவ்டா கலை அறிவியல் கல்லுாரில் பேச்சுப் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது.தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2023 - 24ம் ஆண்டுக்கான கல்லுாரி மாணவ, மாணவியருக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் விழுப்புரம் அரசு கல்லுாரியில் நடந்தது.இதில் மயிலம் அடுத்த கொல்லியங்குணம் பவ்டா கலை, அறிவியல் கல்லுாரி மாணவி ஜெனிபர் முதல் இடத்தைப் பிடித்தார். அவருக்கு ரொக்கப் பரிசாக 10 ஆயிரம் ரூபாய் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.இவரை கல்லுாரி நிறுவனர் ஜாஸ்லின் தம்பி, செயலாளர் ஆல்பினா ஜாஸ், முதல்வர் சுதா கிருஸ்டி ஜாய், துணை முதல்வர் சேகர், கல்வி ஒருங்கிணைப்பாளர் டேவிட், உடற்கல்வி இயக்குனர் ரவி, துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை