உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மது பாட்டில் விற்பனை; மாவட்டத்தில் 26 பேர் கைது

மது பாட்டில் விற்பனை; மாவட்டத்தில் 26 பேர் கைது

விழுப்புரம்; காந்தி ஜெயந்தியையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 26 பேரை கைது செய்தனர். காந்தி ஜெயந்தியை யொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள், மதுபான கூடங்கள் மற்றும் தனியார் மதுபான கூடங்களை மூட கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி, விடுமுறை தினத்தில், கள்ள சந்தையில் மதுபானங்கள் விற்கப்படுகிறதா என்பதை கண்டறிவதற்காக, விழுப்புரம் மாவட்டத்தில் எஸ்.பி., சரவணன் உத்தரவின் பேரில், மதுவிலக்கு ஏ.டி.எஸ்.பி., டி.எஸ்.பி.,க்கள் மேற்பார்வையில் போலீசார் நேற்று சிறப்பு அதிரடி மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டனர். இதில், மாவட்டம் முழுதும் கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்ததாக 26 வழக்குகளை போலீசார் பதிவு செய்து, 26 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 2 இருசக்கர வாகனங்களும், 180 மில்லி கொண்ட 584 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை