உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  மது பாட்டில் கடத்தல்; 2 பேர் கைது 

 மது பாட்டில் கடத்தல்; 2 பேர் கைது 

திண்டிவனம்: திண்டிவனம் அருகே மது பாட்டில்கள் கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். திண்டிவனம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையில் போலீசார் நேற்று மாலை பொம்பூர் கூட்ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் நோக்கி வந்து வந்த பஸ்சில் சோதனை செய்தனர். அதில், வானுார் தாலுகா, திருவக்கரையைச் சேர்ந்த கோபாலக்கண் ணன், 24; என்பவர் புதுச்சேரியிலிருந்து 53 மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதேபோல், விக்கிரவாண்டி தாலுகா, வி.சாத்தனுார் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ்குமார், 27; என்பவர் 44 மதுபாட்டில்களை கொண்டு வந்ததும் தெரிந்தது. உடன் இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி