உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பதாகை பறிப்பை கண்டித்து போலீசாரிடம் மாஜி வாக்குவாதம்

பதாகை பறிப்பை கண்டித்து போலீசாரிடம் மாஜி வாக்குவாதம்

விழுப்புரம், : விழுப்புரத்தில் அ.தி.மு.க., மனித சங்கிலி போராட்டத்தின் போது, பதாகையை போலீசார் பறித்துக் கொண்டதால், முன்னாள் அமைச்சர் சண்முகம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.விழுப்புரத்தில் தி.மு.க., அரசை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் மனித சங்கிலி போராட்டம் நேற்று நடந்தது. அப்போது, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி, மகேஷ், கனிமொழி எம்.பி., ஆகியோருடன், போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் இடம் பெற்ற புகைப்படங்கள் அடங்கிய பதாகை வைத்திருந்தனர்.போதை பொருள் கடத்தல் தலைவனுடன் இவர்களுக்கு என்ன தொடர்பு? என்ற வாசகம் அதில் இடம் பெற்றிருந்தது. மனித சங்கிலி போராட்டம் தொடங்கும் முன், இந்த பதாகைகளை, விழுப்புரம் டவுன் போலீசார் பறிமுதல் செய்தனர். அப்போது அங்கு வந்த முன்னாள் அமைச்சர் சண்முகம் இன்ஸ்பெக்டர் உதயகுமாருடன், வாக்குவாதத்தில் ஈடுபட்டு, 'உண்மை புகைப்படத்தை தான் நாங்கள் பயன்படுத்துகிறோம். படத்தில் உள்ளவர்கள் பதில் சொல்லட்டும். ஏன் பதாகையை பறித்தீர்கள். தராவிட்டால் மறியல் செய்வோம். விதிமீறல் இருந்தால் வழக்கு போடுங்கள், சட்டபூர்வமாக சந்திப்போம்' என்றார். அங்கு வந்த டி.எஸ்.பி., சுரேஷ், பதாகைகளை அ.தி.மு.க.,வினரிடம் தரக்கூறினார். இதனையடுத்து, சண்முகம் உள்ளிட்ட அ.தி.மு.க.,வினர் பதாகைகளை ஏந்தியபடி மனித சங்கிலியில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ