மேலும் செய்திகள்
முதியவர் மீது தாக்குதல்
25-Aug-2025
விழுப்புரம்: விழுப்புரத்தில் தகராறில் 2 பேரை தாக்கி மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மகாராஜபுரத்தைச் சேர்ந்தவர் ரவீந்திரன், 45; இவரது வீட்டின் எதிரில் அதே பகுதியை சேர்ந்த அருண்குமார், 24; என்பவர் குடிபோதையில் ஆபாசமாக திட்டிக் கொண்டிருந்தார். இதை தட்டிக்கேட்ட ரவீந்திரன் மற்றும் அவரது அண்ணன் செந்தில்குமார் மகன் பிரவீன்குமார், 16; ஆகியோரை அருண்குமார் தாக்கி மிரட்டல் விடுத்தார். விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து அருண்குமாரை கைது செய்தனர்.
25-Aug-2025