டாஸ்மாக் ஊழியரை தாக்கியவர் கைது
திண்டிவனம்,: ஓசியில் மதுபாட்டில் தரவில்லை என்பதற்காக டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கிய ஆசாமியை போலீசார் கைது செய்தனர். திண்டிவனம் அடுத்த சிங்கனுாரை சேர்ந்தவர் வேல்முருகன், 52; இவர் தீவனுாரிலுள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை பணியில் இருந்த போது, தீவனுார், காந்திநகரை சேர்ந்த ரங்கநாதன் மகன் ராஜ்குமார், 29; என்பவர், மேற்பார்வையாளர் வேல்முருகனிடம், குடிப்பதற்காக ஓசியில் மது கேட்டார். இதற்கு தரமறுத்த மேற்பார்வையாளரை தாக்கி, மதுபாட்டிலை உடைத்து அவரை குத்த முயன்றார். புகாரின் பேரில், ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து ராஜ்குமாரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.