மேலும் செய்திகள்
கள்ளச்சாராய வியாபாரிகள் 3 பேர் கைது
18-Nov-2024
மயிலம்; மயிலம் அடுத்த தழுதாளியில் வாகன சோதனையின் போது, பைக் திருடிய நபர் சிக்கினார்.மயிலம், புதுச்சேரி சாலையில் தழுதாளி கிராமத்தில் மயிலம் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர்.அதில், அவர் வந்த பைக் தழுதாளியில் இருந்து திருடி வந்தது தெரியவந்தது. மேலும் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், திண்டிவனம், ரோஷனை பாட்டை, முனியன் தெருவைச் சேர்ந்த செங்கேணி மகன் ஆறுமுகம், 37; என்பதும், பல்வேறு இடங்களில் பைக் திருடியதும் தெரியவந்தது.அதனைத் தொடர்ந்து ஆறுமுகம் மீது வழக்குப் பதிந்து அவரிடமிருந்து 10 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
18-Nov-2024