மேலும் செய்திகள்
'5 டவுன் பஸ்கள் புதிய வழித்தடத்தில் இயக்கம்'
12-Nov-2024
விழுப்புரம் : விழுப்புரத்தில் நின்றிருந்த பஸ் படிக்கட்டிலிருந்து கீழே விழுந்த முதியவர் இறந்தார்.விழுப்புரம் அடுத்த கெடாரைச் சேர்ந்தவர் கண்ணன், 69; கூலித் தொழிலாளி. இவர், கடந்த 25ம் தேதி மாலை, விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில், நிறுத்தி வைத்திருந்த அரசு டவுன் பஸ்சின் பின்பக்க படிக்கட்டில் ஏறினார்.அப்போது, திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்ததில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். விழுப்புரம் மேற்கு போலீசார், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
12-Nov-2024