உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திருட்டில் ஈடுபட்ட நபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

திருட்டில் ஈடுபட்ட நபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

விழுப்புரம்: விழுப்புரத்தில் திருட்டில் ஈடுபட்ட நபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.விழுப்புரம் திருக்காமு நகரில் உள்ள தனியார் கல்வி நிறுவன அலுவலகத்தில், கடந்த 11.11.23ம் தேதி இரவு கதவை உடைத்து மர்ம நபர்கள் பொருள்களை திருடிச்சென்றனர்.இச்சம்பவத்தில் ஈடுபட்ட மதுரை காந்தி நகரைச் சேர்ந்த பொய்யாமொழி, 62; என்பவரை விழுப்புரம் மேற்கு போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு விழுப்புரம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்தது. நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி ராதிகா, திருட்டில் ஈடுபட்ட பொய்யாமொழிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ