உள்ளூர் செய்திகள்

மண்டல பூஜை

விழுப்புரம்; விழுப்புரம் பூந்தோட்டம் ஐயப்பசாமி சன்னதியில் மண்டல பூஜை நடந்தது.விழுப்புரம் ரங்கநாதன் ரோடு, சித்திவிநாயகர் கோவிலில் உள்ள மணிகண்டன் ஐயப்பசாமி சன்னதியில் நேற்று மண்டல பூஜை நடந்தது. காலை 7.00 மணிக்கு கணபதி பூஜையுடன் மண்டல பூஜை தொடங்கியது. தொடர்ந்து, 18 படி பூஜையும், மணிகண்டன் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனையும் நடந்தது. மணிகண்ட சாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பிறகு அன்னதானம் வழங்கினர். ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை