உள்ளூர் செய்திகள்

மே தின விழா

விழுப்புரம் : விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்ச் சங்கத்தினர் சார்பில் மே தின விழா கொண்டாப்பட்டது.விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன் நடந்த நிகழ்ச்சிக்கு, அண்ணா தொழிற் சங்க மண்டல செயலாளர் கணேசன் தலைமை தாங்கி, தொழிற்ச் சங்க கொடியேற்றி தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கினார்.இணைச் செயலாளர் ராஜேந்திரன், பணிமனை செயலாளர் சேகர், நிர்வாகிகள் நமச்சிவாயம், ஜெயக்குமார், சண்முகசுந்தரம், மோகன், ஸ்ரீராம், முத்துக்குமரன், ராஜவேலு உட்பட பலர் பங்கேற்றனர்.விழுப்புரம் மாவட்ட மா.கம்யூ., கட்சி அலுவலகத்தில் நடந்த கொடியேற்றத்திற்கு, மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., ராமமூர்த்தி செங்கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்துகுமரன், மூர்த்தி, ராஜேந்திரன், சி.ஐ.டி.யு., மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், போக்குவரத்து சங்கம் ரகோத்தமன், மாவட்ட குழு உறுப்பினர் வீரமணி, மின் ஊழியர் மத்திய அமைப்பு சேகர், டாஸ்மாக் ஊழியர் சங்கம் கணபதி, சிங்கரவேலு, நகர செயலாளர்கள் மேகநாதன், முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை