உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  விழுப்புரம் - நாகை நான்கு வழி சாலையில் மெகா உடைப்பால் விபத்து அபாயம்

 விழுப்புரம் - நாகை நான்கு வழி சாலையில் மெகா உடைப்பால் விபத்து அபாயம்

பாகூர்: விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில், சேலியமேடு அருகே பாலத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், விபத்து அபாயம் நிலவி வருகிறது. விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே 6,431 கோடி ரூபாய் செலவில், 194 கி.மீ., நீளத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது.இதில் பெரும்பகுதி பணி முடிவுற்றுள்ளது. கடந்த ஏப்ரல் 6ம் தேதி ராமேஸ்வரம் பாம்பன் பாலம் திறப்பு விழாவிற்கு வந்திருந்த பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த நான்கு வழிச்சாலை யை போக்குவரத்திற்கு திறந்து வைத்தார். பல இடங்களில் சாலை கட்டுமானம் சரியாக இல்லாததால், வாகன ஓட்டிகள் ப ல்வேறு அசவுரியங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரி அடுத்த சேலியமேட்டில் அமைக்கப்படும் சுங்க சாவடியில் இருந்து 300 மீட்டர் துாரத்தில், சிறு பாலத்தின் இணைப்பு பகுதியில் விரிசல் ஏற்பட்டது. அது, கண்டு கொள்ளப்படாததால், பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டு, கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சேதமான சாலையை சீரமைக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு துவங்கியது. ஆனால், பணி தொடர்ந்து நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இப்பகுதி, மின் விளக்குகளின்றி இரவில் இருண்டு கிடப்பதால் வாகன ஓட்டிகள் சாலையின் நிலை தெரியாமல், விபத்தில் சிக்கும் அபாயம் நிலவி வருகிறது. எனவே, 'நகாய்' அதிகாரிகள், சேதமான சாலையை சீரமைக்கும் பணியை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ