உள்ளூர் செய்திகள்

பால் குடம் ஊர்வலம் 

வானுார்; நாவற்குளம் சுயம்பு ஆதிபராசக்தி அம்மன் கோவிலில், ஆடிப்பூர விழாவை முன்னிட்டு பால் குடம் ஊர்வலம் நடந்தது. வானுார் அடுத்த நாவற்குளம் பகுதியில் சுயம்பு ஆதிபராசக்தி அம்மன், சொர்ணலிங்கேஸ்வரர், வரதராஜ பெருமாள் கோவில்கள் உள்ளது. கடந்த 20ம் ஆண்டு ஆடிபூர விழா கடந்த 27ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் காலை 9:30 மணிக்கு பால் குடம் ஊர்வலம் நடந்தது. திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மதியம் 12:00 மணிக்கு, சாகை வார்த்தல், அம்மனுக்கு அபிேஷக ஆராதனை நடந்தது. இரவு 8:30 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை