உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / புதிய ரேஷன் கடை அமைச்சர் திறந்து வைப்பு

புதிய ரேஷன் கடை அமைச்சர் திறந்து வைப்பு

செஞ்சி: செஞ்சி ஒன்றியம் அனையேரி ஊராட்சியில் 11.77 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டிய புதிய ரேஷன் கடை கட்டடம் திறப்பு விழா நடந்தது. செஞ்சி சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் உமா மகேஸ்வரி ஆனந்தன் முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் ரவி வரவேற்றார்.சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து, ரேஷன் பொருள் விநியோகத்தை துவக்கி வைத்தார்.இதில் மேல் அருங் குணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் நாகப்பன், ஒன்றிய துணைச் செயலாளர் செல்வமணி, பொருளாளர் இக்பால், பாடி பள்ளம் ஊராட்சி தலைவர் தாட்சாயணி கார்த்திகேயன், மாவட்ட பிரதிநிதி அய்யாதுரை, ஊராட்சி நிர்வாகிகள் பாபு, தட்ணாமூர்த்தி, அலெக்ஸ், நடராஜ், ஏழுமலை, பாண்டியன், தேவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை