| ADDED : பிப் 01, 2024 05:34 AM
விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டத்தில் ரூபாய் 5 கோடியே 16 லட்சம் மதிப்பில்17 இடங்களில் அரசு மருத்துவக் கட்டடங்களை சுகாதாரத்துறை அமைச்சர் திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் புகழேந்தி, லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ரமாதேவி வரவேற்றார்.சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் உயர் சிகிச்சை பிரிவு, செவித்திறன் கண்டறியும் அறை மூன்றாம் பாலினத்தவருக்கான ஆலோசனை பிரிவு உட்பட மாவட்டத்தில் ரூபாய் 5 கோடியே 16 லட்சம் மதிப்பில் 17 மருத்துவ கட்டடங்களை திறந்து வைத்தும்,அமைச்சர் மஸ்தான் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் பேசினர்.மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், சுகாதாரத்துறை இயக்குனர் சங்கு மணி, துணை இயக்குனர் செந்தில்குமார்,பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், ஒன்றிய சேர்மன்கள் சங்கீத அரசி ரவிதுரை, சச்சிதானந்தம் ,உஷா ,கலைச்செல்வி, துணைச் சேர்மன் ஜீவிதா ரவி,மாவட்ட கவுன்சிலர் மீனா , ஒன்றிய கவுன்சிலர் இளவரசி , சாவித்திரி, ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகரன்,ஒன்றிய செயலாளர்கள் ரவிதுரை, ஜெயபால் உள்பட மருத்துவ துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். முடிவில் வட்டார மருத்துவ அலுவலர் வினோத் நன்றி கூறினார்.