உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஓமந்துாரார் பள்ளியில் எம்.எல்.ஏ., ஆய்வு

ஓமந்துாரார் பள்ளியில் எம்.எல்.ஏ., ஆய்வு

கண்டமங்கலம்: கொத்தாம்பாக்கம் ஓமந்துாரார் அரசு நிதி உதவி நடுநிலைப் பள்ளியில் வானுார் எம்.எல்.ஏ., சக்கரபாணி ஆய்வு மேற் கொண்டார். ஆய்வின் போது, பள்ளியில் புதிய ஆழ்துணை கிணறு அமைத்து குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். சுற்றுச்சுவர் மற்றும் சிறுநீர் கழிப்பிட வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை வைக்கப் பட்டது. இது குறித்து தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ., உறுதி அளித்தார். ஆய்வின்போது பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவை சாப்பிட்டு தரம் குறித்து சோதனை செய்தார். பள்ளி தலைமையாசிரியர் ேஹமலதா, கண்டமங்கலம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் ராமதாஸ், ஒன்றிய அவைத்தலைவர் ஏழுமலை, மாவட்ட கவுன்சிலர் நித்தியகல்யாணி ராமமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் செல்வி சுந்தரமூர்த்தி, முன்னாள், ஊராட்சி தலைவர் பொன்மலர் ராஜா, கிளைச் செயலாளர்கள் தனஞ்செழியன், சண்முகம் மற்றும் கிராம மக்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை