உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாணவரிடம் மொபைல் போன் பறிப்பு

மாணவரிடம் மொபைல் போன் பறிப்பு

விழுப்புரம் : விழுப்புரத்தில் கல்லுாரி மாணவரிடம் மொபைல் போன் பறித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம், கிழக்கு பாண்டிரோடு குப்புசாமி லே அவுட் பகுதியைச் சேர்ந்தவர் பஞ்சாமிர்தம் மகன் தினேஷ், 19; இன்ஜினீயரிங் மாணவரான இவர், நேற்று முன்தினம் இரவு, கிழக்கு பாண்டி சாலையில் உள்ள ஒரு இனிப்பகம் எதிரே நின்று கொண்டு, மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்தார்.அப்போது, விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி மார்க்கமாக பைக்கில் சென்ற 25 வயது மதிக்கத்தக்க வாலிபர்கள் 2 பேர், தினேஷிடமிருந்து மொபைல் போனை பறித்துச் சென்றனர்.புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து 2 பேரையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்