உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தாய் கண்டிப்பு: மகன் தற்கொலை

தாய் கண்டிப்பு: மகன் தற்கொலை

விழுப்புரம் : விழுப்புரம் அருகே வேலைக்குச் செல்லாமல் இருந்ததை தாய் கண்டித்ததால் மகன் தற்கொலை செய்து கொண்டார்.விழுப்புரம் அடுத்த காகுப்பம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் கணபதி, 25; இவர் திருபுவனையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். திருமணமாகவில்லை. கடந்த சில மாதங்களாக, கணபதி வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனை அவரது தாய் மீனா, கண்டித்தார். இதனால், விரக்தியுடன் இருந்த கணபதி, நேற்று முன்தினம் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி